மஞ்சந்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலையின் குறைபாடுகளை வெகுவிரைவில் நிவர்த்தி செய்ய நடவடிக்கை: ஷிப்லி பாறூக்

0
160

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மஞ்சந்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு திடீர் விஜயமொன்றை நேற்று (09) புதன்கிழமை மேற்கொண்டு வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் அப்துல் ஜப்பார், ஏனைய வைத்தியர்கள் மற்றும் அங்கு கடமை புரியும் ஊழியர்களையும் சந்தித்து வைத்தியசாலையின் தேவைகள், குறைபாடுகள், அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டதுடன் வைத்தியசாலையினை பார்வையிட்டார்.

இவ்விஜயத்தின்போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் இவ் வைத்தியசாலையானது இலங்கையில் உள்ள சிறந்த 5 ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்குள் ஒன்றாக திகழ்கின்றது அதுமட்டுமன்றி இவ்வைத்தியசாலையானது 35க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைக் கொண்டு திறம்பட இப்பிரதேசத்திற்கு சேவைகளை வழங்கிகொண்டிருக்கின்றது.

மேலும் இந்த வைத்தியசாலையானது இப்பிரதேசத்திற்கு கிடைத்த ஓர் வரபிரசாதமாகும்.

அவ்வாறு இருந்த போதிலும் இவ் வைத்தியசாலை பல்வேறு குறைபாடுகளுடனும், கவனிக்கப்படாமல் இருப்பதனை காணும்பொழுது மிகவும் கவலையளிக்கிறது.

ஏனெனில், இங்கு அமையபெற்றுள்ள நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் விடுதியானது, 2015 முதல் எவ்வித செயற்பாடுகளுமின்றி மூடப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி பல அடிப்படை வாசதிகளின்றியும் காணப்படுகின்றது.

எனவே வைத்தியசாலையின் நிலைமைகளை உடனடியாக கௌரவ சுகாதார பிரதியமைச்சர் பைசல் காசிம் அவர்களை தொலைபேசியினூடாக தொடர்புகொண்டு அறிவித்ததனை தொடர்ந்து இந்த வைத்தியசாலையின் குறைபாடுகளை வெகுவிரைவில் நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக சுகாதார பிரதியமைச்சர் வாக்குறுதியளித்துள்ளார் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கூறினார்.

Ayurvedic Hospital Manchanthoduwai DSC_5983 DSC_5986 DSC_5997 DSC_6004 DSC_6005 DSC_6008

LEAVE A REPLY