பொது பல சேனா, சிங்கள ராவய, ராவண பலய ஒன்றிணைவு

0
264

மூன்று பௌத்த அமைப்­புகள் நேற்று முதல் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டப்­போ­வ­தாக அறி­வித்­துள்­ளன.

பொது­ப­ல­சேனா அமைப்பு, சிங்­கள ராவய அமைப்பு மற்றும் ராவணா பலய அமைப்பு ஆகிய மூன்று அமைப்­பு­க­ளுமே ஒன்­றி­ணைந்­துள்­ளன.

எதிர்­வரும் காலங்­களில் தமது இலக்கை நோக்கி, தேசிய நலன் மற்றும் பௌத்த நலன்­க­ருதி தமது போராட்­டங்­களை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக இவை அறிவித்துள்ளன.

இவ் அமைப்­புகள் ஒன்­றி­ணைந்து நேற்­றுக்­காலை கிரு­லப்­பனை பௌத்த மத்­திய நிலை­யத்தில் ஊட­க­வி­ய­லாளர் மாநா­டொன்­றினை நடத்தி இத்­த­க­வலை வெளி­யிட்­டன.

மாநாட்டில் பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர், சிங்­கள ராவய அமைப்பின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர், ராவணா பலய அமைப்பின் செய­லாளர் இத்தே கந்த சத்­தா­திஸ்ஸ தேரர் மற்றும் அமைப்­பு­களின் தேசிய அமைப்­பா­ளர்­களும் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

இம் மாநாட்டில் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் இது­வரை தனித் தனி­யாக இயங்­கிய அமைப்­புகள் ஏன் ஒன்­றி­ணைந்து செயற்­படத் தீர்­மா­னித்­தன என்­பதை விளக்­கினார். ஒரு சிலர் குரு­மார்கள் ஏன் வீதியில் இறங்கி கோஷ­மி­டு­கி­றார்கள் என்று கேட்­கி­றார்கள். பன்­ச­லை­களில் இருந்து மார்க்கப் பணி­களை முன்­னெ­டுக்க முடி­யாதா என்று விமர்­சிக்­கி­றார்கள்.

சட்டம் இயற்றும் பாரா­ளு­மன்­றத்தில் தமிழ் முஸ்லிம் எம்.பி. க்கள் தமது சமூ­கத்­துக்­காக குரல் கொடுக்­கி­றார்கள். சமூ­கப்­பி­ரச்­சி­னை­களைப் பேசு­கி­றார்கள். இதனை நாம் எதிர்க்­க­வில்லை.

ஆனால் சிங்­கள எம்.பி. க்கள் சிங்­கள பௌத்­தர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­காக குரல் கொடுப்­ப­தில்லை. எமது பிரச்­சி­னைகள் அதி­க­ரித்துக் கொண்டே வரு­கின்­றன. இதனால் இதற்­காக குரல் கொடுப்­ப­தற்­காக நாம் ஒன்­றி­ணைந்­துள்ளோம்.

எமது பூர்­வீக இடங்கள், புரா­தன புதை பொருள் பிர­தே­சங்கள் முஸ்­லிம்­க­ளினால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ளன.

கூர­கல (ஜெய்­லானி), தெவ­ன­கல மற்றும் முகுது விகாரைப் பிர­தே­சங்­களில் எமது மத தலங்கள் ஏனைய மதத்­தி­னரால் அழிக்­கப்­பட்டு ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ளன. முஸ்­லிம்கள் பலாத்­கா­ர­மாக கைப்­பற்றிக் கொண்­டுள்­ளார்கள். எமது தொல்­பொருள் பிர­தேசம் அழிக்­கப்­பட்­டுள்­ளது.

கிழக்கில் பெக்கோ இயந்­திரம் மூலம் பௌத்த தொல்­பொருள் பகு­திகள் தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டுள்­ளன. இந்­நாட்டில் தொல் பொருள் சட்டம் ஒன்­றுள்­ளது. ஆனால் சட்ட நட­வ­டிக்­கைகள் எதுவும் அவர்­க­ளுக்கு எதி­ராக எடுக்­கப்­ப­ட­வில்லை.

ஏனைய மதத்­தினர் எமது புரா­தன, பூர்­வீக சமய பிர­தே­சங்­களை கைப்­பற்­றிக் கொண்­டி­ருப்­பதை பார்த்துக் கொண்டு எம்மால் மௌன­மாக இருக்க முடி­யாது. எனவே மகா­நா­யக்க தேரர்­க­ளையும் இவ்­வி­ட­யத்தில் கவனம் செலுத்­து­மாறு கோரிக்கை விடுத்­துள்ளோம்.

இன்று நாம் உரு­வாக்­கி­யுள்ள இந்த அமைப்பை தேசிய ரீதியில் பலப்­ப­டுத்­த­வுள்ளோம்.

கிரா­மிய மட்­டத்தில் குரு­மார்­க­ளுடன் கலந்­து­ரை­யா­ட­வுள்ளோம். இதற்­கான பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்று வரு­கின்­றன.

புதிய அர­சி­ய­ல­மைப்பு
புதிய அர­சி­ய­ல­மைப்பில் தற்போது பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள முதன்மைத்துவம் இல்லாமல் செய்யப்படுமோ என்ற அச்சம் எமக்கிருக்கிறது.

அவ்வாறு நேருமானால் போராட்டங்களை நடத்துவோம். அவ்வாறான அரசியலமைப்பு திருத்தத்திற்கு கையுயர்த்தி விட்டு எம்.பி. மார்களை ஊருக்கு வரவிடமாட்டோம் என்றார்.

(Vidivelli)

LEAVE A REPLY