இந்த உலக கிண்ணத்திற்கு மட்டும் தலைவராக இருப்பேன்: மேத்யூஸ் கருத்து

0
148

காயத்தால் அவதிப்பட்டு வரும் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தலைவர் பதவியை விட்டு விலகியதால் கடைசி நேரத்தில் இலங்கை அணியை வழிநடத்தும் பொறுப்பு மேத்யூசிடம் வழங்கப்பட்டது. மேத்யூஸ் நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,

‘மலிங்கா, தலைவர் பதவியை ராஜினாமா செய்ததும், என்னை தலைவர் பொறுப்பை ஏற்கும்படி கூறினார்கள். மனரீதியாக கேப்டன் பதவியை ஏற்கும் நிலையில் இல்லை என்றாலும், என்னால் மறுக்கவும் முடியவில்லை. ஏனெனில் சில ஆண்டுகளாக ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்த அனுபவம் எனக்கு உண்டு.

அது மட்டுமின்றி எனது அணியோ அல்லது தேசமோ பின்னடைவுக்கு தள்ளப்படுவதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. தற்போது இந்த உலக கோப்பைக்கு மட்டும் கேப்டனாக இருக்க சம்மதித்தேன். அணியை சிறந்த நிலைக்கு கொண்டு வர என்னால் முடிந்த முழு முயற்சியை வெளிப்படுத்துவேன். முதலாவது ஆட்டத்துக்கு மலிங்கா உடல்தகுதி பெறுவார் என்று நம்புகிறோம்’ என்றார்.

LEAVE A REPLY