காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு மகளிர், சிறுவர் விவகார அமைச்சர் விஜயம்

0
200

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார அண்மையில் திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

வைத்தியசாலையில் அமைந்துள்ள பால் நிலை அடிப்படையிலான வன்முறையைக் குறைக்கும் மையத்தினை பார்வையிட்ட பின்னர் அமைச்சர் வைத்தியசாலை அத்தியட்சகர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது வைத்தியசாலையின் வைத்திய அத்தியச்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிரினால் உளவள ஆலோசனை பணியாளர்கள் பற்றாக்குறை,சிறுவர்களுக்கான தனி அலகு,வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் சிறுவர்கள் பொழுது போக்குவதற்கான சிறுவர் பூங்கா,விளையாட்டு உபகரணங்கள்,அத்தியாவசியப் பொருட்கள் என்பன தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன் அது தொடர்பில் கவனமெடுத்து விரைவில் அவற்றை செய்து தர நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இக்கலந்துரையாடலின் போது மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார,அமைச்சின் அதிகாரிகள்,காத்தான்குடி வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபிர்,காத்தான்குடி தள வைத்தியசாலை பால்நிலை நிலை அடிப்படையிலான வன்முறையைக் குறைக்கும் மையத்தின் இணைப்பாளர் இராஜலக் ஷ்மி,வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

9a6ae604-04cc-46ab-9aab-982803f40d10 9e98e6c5-4b2f-4cdc-a187-82b6d7609a81 b54d3c09-0e1f-46e6-898a-f37a732b4c39 ce1a80dd-7ed1-48ff-9552-c7b7825bfc5a f67619a0-24c9-4b0f-9c92-c51aaaf5b5c3

LEAVE A REPLY