மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் ‘அவள் இல்லதாத உலகம்’ எனும் தொனிப் பொருளில் மகளிர் தின விழா

0
180

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

அன்புத் தாயின் அரவணைப்பில் வளர்க்கப்பட்ட பெண் திருமணம் என்ற வட்டத்திற்குள் உள்வாங்கிக் கொண்டால் அங்கு கணவனால் ஏற்படும் இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

சந்தேகம் என்ற தீராத நோய்க்குள் கணவன் உள்வாங்கப்பட்டால் மனைவிக்கு தொல்லை கொடுக்கிறான். வன்முறைகளை பிரயோகித்து வதைக்கிறான். தாங்கொண்ணா துயரத்தில் எத்தனையோ யுவதிகள் வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றனர்.

எனவே பெண்களுக்கெதிரான வன்முறைக் கலாசாரத்தினை இல்லாதொழிக்க அனைவரும் முன்வர வேண்டும்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மகளிர் தினத்தை சிறப்பிக்குமுகமாக ‘அவள் இல்லதாத உலகம்’ எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் இணைப்பாளர் அஸீஸ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவின் போது பிரதம அதிதியாக விரிவுரையாளர் திருமதி. பாரதி கெனடி அழைக்கப்பட்டிருந்தார்.

இங்கு சிறப்புரையாற்றிய அஸீஸ் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது, இன்று பெண்கள் கொள்கை, சட்டம், ஆகியவற்றுக்கான சீர்திருத்தங்களையும் மாற்றங்களையும், உருவாக்குவதற்காக முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர்.

இவ்வாறு பரந்து பட்ட சமூக இயக்கங்களில் பிரிக்க முடியாத பகுதியாக பெண்கள் அமைப்புக்கள் செயற்பட்டு வருகின்றன.

இன்று பெண்களுக்கான உரிமைகளும், பாதுகாப்பும் சட்டத்தில் தெளிவாக இருக்கின்ற போதிலும் நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான துஸ்பிரயோகங்கள், பாலியல் வன்முறைகள் பரவலாக நடந்தேறிக் கொண்டிருக்கிறது.

இதனைச் செய்கின்றவர்கள் ஏதோ ஒரு வகையில் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்கின்றனர். இவர்களுக்கான கடுமையான தண்டனைகள் எதிர்காலத்தில் கொண்டு வர வேண்டிய தேவை இருக்கின்றது. இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் தனியார் வங்கிகள் மூலை முடுக்கெல்லாம் திறக்கப்பட்டு வருகிறது.

மக்களுக்கு சேவையாற்றுவதற்காக அவர்கள் இயங்கி வந்தாலும் இந்த வக்கிக் கடன் பொறிக்குள் அனேகமான குடும்பப் பெண்கள் சிக்கிக் கொள்கின்றனர். வீட்டுக் கடன் என்றும், இன்னோரன்ன கடன்களையும் இலகுவாக எடுத்துக் கொள்கின்றனர்.

அத்துடன் தொலைக்காட்சிப்பெட்டி, சலவை இயந்திரம், குளிர்சாதனப்பெட்டி போன்றவற்றை மாதாந்த கட்டுத் தொகையில் பெற்றுக் கொள்கின்றனர். இக் கடனை உரிய காலப் பகுதிக்குள் கட்ட முடியாது தற்கொலை முயற்சியையும் செய்து வருவதை அண்மைக்காலங்கங்களில் காணக்கூடியதாக இருக்கிறது. இவ்விடயங்களில் பெண்களைப் பயன்படுத்துவது ஆண்களாகவே இருக்கின்றனர்.

ஒருபக்கம் பெண்களுக்கு இருக்கின்ற உரிமைகளை பாதுகாக்க போராடுகின்ற வேளை அடிமட்டத்திலுள்ள பெண்களின் அன்றாடப் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்ப்பதற்கு அனைவர்களும் முன்வர வேண்டும் என மேற்கண்டவாறு அஸீஸ் தெரிவித்தார்.

இந் நிகழ்வின் போது சிறப்புப் பட்டிமன்றமும், செரன்டிப் முஸ்தபா குழுவினரின் நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

42a8eca7-b922-4248-bfa1-34de3f02c218 270c900f-eab7-4f99-b615-e3d66e88df54 650fbb2c-96c6-4879-b720-4b47ad9ac267 50425f1b-b5ae-4327-874e-f33c88a851cb c83516dd-e6c9-4b9f-836c-05f066eb3897 d160745d-7794-45f9-ab31-4d8611a9b7c9

LEAVE A REPLY