மார்க்க கல்வியினை வழங்குவதனூடாகவே பிள்ளைகளை ஒழுக்க சீலர்களாக உருவாக்க முடியும்: சிப்லி பாறுக்

0
154

பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு மார்க்க கல்வியினை வழங்கி அதனூடாக மார்க்கப்பற்றுள்ளவர்களாக உருவாக்கும் பட்சத்தில் அவர்கள் ஒழுக்கசீலர்களாக உருவாகுவதுடன், பெற்றோர்கள் காணும் கனவுகளான உயரிய பட்டங்கள் அவர்களின் பின்னால் வரும்! கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் 2015ஆம் ஆண்டிற்கான பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் காத்தான்குடி ஹனா லிட்டில் லேனர்ஸ் பாலர் பாடசாலைக்கு தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு 2016.03.08ஆந்திகதி பாடசாலை அதிபர் திருமதி ஜெசீமா முஸ்தபா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய அவர் பிள்ளைகளின் ஆரம்ப கல்வியினை சிறந்த முறையில் வழங்கப்படுவதன் மூலம் ஒவ்வொரு பிள்ளைகளும் எதிர்காலத்தில் தலைசிறந்தவர்களாக உருவாகுவார்கள். பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு மார்க்க கல்வியினை வழங்கி அதனூடாக மார்க்கப்பற்றுள்ளவர்களாக உருவாக்கும் பட்சத்தில் அவர்கள் ஒழுக்க சீலர்களாக உருவாகுவார்கள் அத்துடன் தமது பிள்ளைகள் எதிர்காலத்தில் வைத்தியராகவோ, பொறியியளாலராகவோ, சட்டத்தரணியாகவோ ஆகவேண்டும் என்று பெற்றோர்கள் காணும் கனவான உயரிய பட்டங்கள் அவர்கள் பின்னால் தேடிவரும்.

தற்போது எம் முன்னிலையிலே இருக்கின்ற பாலர்கள் எவரும் மோசமனவர்களல்ல அவர்களை நாட்டின் சிறந்த நட்பிரஜைகளாக உருவாக்குவதற்குரிய முழுப்பொறுப்பும் எமக்குரியதே. ஏனைய இடங்களுடன் ஒப்பிடுகையில் நூறுவீதம் முஸ்லிம் சமூகம் வாழ்கின்ற எமது காத்தமாநகர் மார்க்கப்பற்றுள்ள, ஒழுக்க விழுமியங்கள் மிக்க மக்கள் வாழுகின்ற நகரமாக திகழவேண்டும்.

மேலும் தற்போது நான் வீதிக்கு ஒரு நாள் எனும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்து பலவீடுகளுக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை நேரில் அறிந்து வருகிறேன். பல பேர் என்னை எனது அலுவலகத்தில் வந்து சந்திக்கின்றபோது அவர்களுடைய நிலைமையினை 100 வீதம் என்னால் அறியமுடியாமல் உள்ளது. எனவே அவர்களின் இடங்களுக்கு நேரில் சென்று பர்வையிடுகின்றபோதே அவர்களின் நிலைமையை அறிந்துகொள்ள முடியும் என்பதற்காக இவ்வேலைத்திட்டத்தினை அனைத்து இடங்களிலும் முன்னெடுத்து கொண்டிருக்கின்றேன்.

அங்கு நான் காண்கின்ற விடயம் என்னவெனில் நூற்றில் பதினைந்து வீதமான குடும்பங்களில் பெண்கள் கணவனை இழந்தவர்களாகவும் அல்லது கணவனால் கைவிடப்பட்டவர்களாகவும் காணப்படுகின்றனர். இதனால் பல சமூக சீரழிவுகளை எமது சமூகம் எதிர்நோக்கியுள்ளது. அவ்வாறான நிலைமைகள் குறைவடைய நாம் அனைவரும் ஒன்றுபட்டு அதற்காக பாடுபட வேண்டும், மேலும் எமது சிறார்களை எதிர்காலத்தில் சிறந்த ஒழுக்கமுள்ள சந்ததியினராக உருவாக்குவதற்கு நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டுமென்றும் தமது உரையில் உறுப்பினர் தெரிவித்தார்.

M.T. ஹைதர் அலி

LEAVE A REPLY