வேர்ள்ட்விஷன் நிறுவனத்தினால் மீனவர்களுக்கு 16 தோணிகள் வழங்கி வைப்பு

0
153

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்ட 16 மீனவர்களுக்கு செவ்வாய்க்கிழமை தோணிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக வேர்ள்ட் விஷன் நிறுவனத்தின் முகாமையாளர் ஐ. மைக்கல் தெரிவித்தார்.

தலா ஒவ்வொன்றும் சுமார் 36 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இந்தத் தோணிகள் அந்தப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வில்லுக்குளம், புளுகுணாவைகுளம், கங்காணியார்குளம் ஆகிய குளங்களில் வாழ்வாதாரமாக மீனவத் தொழிலை மேற்கொண்டுவரும் மீனவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

நாற்பதுவட்டை, தாந்தாமலை, கச்சக்கொடிசுவாமிமலை, வில்லுக்குளம் போன்ற கிராமங்களை சேர்ந்த இந்த மீனவக் கிராமங்களிலுள்ள மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக ஏற்கெனவே பல்வேறு மீனவர் மறுவாழ்வு நலத் திட்டங்களில் சுமார் 20 இலட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக வேர்ள்ட் விஷன் நிறுவனத்தின் முகாமையாளர் ஐ. மைக்கல் மேலும் தெரிவித்தார்.

நாற்பதுவட்டை மீனவர் சங்க கட்டிட வளாகத்தில் நடைபெற்ற தோணிகளை மீனவர்களுக்குக் கையளிக்கும் நிகழ்வில் தேசிய மீன்பிடி விரிவாக்கல் சபையின் பணிப்பாளர் கே. புஸ்பலதா, பட்டிப்பளை பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம், மாவட்ட மீன்பிடி விரிவாக்கல் உத்தியோகத்தர் ஜே. நெல்சன், வேர்ள்ட்விஷன் நிறுவன பட்டிப்பளை பிராந்திய அபிவிருத்தி திட்ட முகாமையாளர் ஐ. மைக்கல், திட்ட இணைப்பாளர் சி. நிருமிதன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மீனவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY