டி20 உலகக் கிண்ண தகுதிச் சுற்று: அயர்லாந்து அணியை வீழ்த்தியது ஓமான்

0
181

20 ஓவர் உலககிண்ண கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இதன் தகுதி சுற்று ஆட்டத்தில் 8 அணிகள் பங்கேற்று உள்ளன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் வங்காளதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து, ஓமன் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, ஆங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் முதன்மை சுற்றுக்கு (சூப்பர் 10) தகுதி பெறும்.

தகுதிச்சுற்று போட்டியில் இன்று நடந்த 2-வது ஆட்டத்தில் ஓமன் அணியும் அயர்லாந்து அணியும் பலப்பரிட்சை நடத்தின.

முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி, 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக கேரி வில்சன் 38 ரன்கள் எடுத்தார்.

155 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஓமன் அணி, 19.4 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அமிர் அலி 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அந்த அணி வெற்றி பெற உதவினார்.

LEAVE A REPLY