ஊக்கமருந்து தவறை ஒப்புக்கொண்ட ஷரபோவாவுக்கு செரீனா பாராட்டு

0
196

பிரபல ரஷிய டென்னிஸ் வீராங்கனை மரிய ஷரபோவா, ‘மெல்டோனியம்’ என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தி இருப்பது நேற்று முன்தினம் அம்பலமானது. தனது தவறை அவரும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். ஊக்கமருந்து பட்டியலில் கடந்த ஜனவரி மாதம் அந்த மருந்து சேர்க்கப்பட்டதை கவனிக்காமல் அதை உட்கொண்டதாக கூறினார்.

இந்த சர்ச்சை குறித்து ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘ஷரபோவா ஊக்க மருந்து சோதனையில் சிக்கியது பெரும்பாலானவர்களுக்கு அதிர்ச்சியும், ஆச்சரியத்தையும் அளித்தது. ஆனால் தவறுக்கு தானே பொறுப்பு என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டது அவரது மனதைரியத்தை காட்டுகிறது. அவரது நேர்மையை கண்டு மகிழ்கிறேன்’ என்றார்.

LEAVE A REPLY