தென்ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் பான்கிசோ டி20 உலகக்கிண்ணத்தில் விளையாட அனுமதி

0
120

தென்ஆப்பிரிக்காவின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக இருப்பவர் இம்ரான் தாஹிர். இவருடன் ஆரோன் பான்கிசோவும் இந்தியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கிண்ணத்தில் விளையாட தென்ஆப்பிரிக்க அணியில் இடம் பிடித்திருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் உள்ளூர் போட்டிகளில் விளையாடும்போது பான்கிசோ ஐ.சி.சி. விதிமுறைக்கு மாறாக 15 டிகிரிக்கு மேல் கையை வளைத்து பந்து வீசியதாக புகார் எழுந்தது. இதனால் அவர் உள்நாட்டு போட்டிகளில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டது.

பின்னர், அவர் பந்துவீச்சு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது அவரது பந்து வீச்சு விதிமுறைக்கு மாறாக இருந்தது தெரியவந்தது. எனவே, தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் அவர் இடம்பெற்றிருந்தும் ஆடும் லெவனில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் அவருக்கு 2-வது பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது பான்கிசோ தனது தவறுகளை திருத்தி சரியான முறையில் பந்து வீசினார். இதனால் உலகக்கோப்பையில் விளையாட தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.

LEAVE A REPLY