‘இஸ்ரேல் அழிக்கப்பட வேண்டும்’ வாசகத்துடன் ஈரான் ஏவுகணை சோதனை

0
331

இஸ்ரேல் அழிக்கப்பட வேண்டும் என்று வாசகம் எழுதப்பட்ட, தரை இலக்குகளைத் தாக்கவல்ல, இரண்டு ஏவுகணைகளை ஈரான் சோதனை செய்ததாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

ஃபார்ஸ் நியூஸ் ஏஜென்சி இந்த செய்தியை வெளியிட்டு ஏவுகணையின் படங்களையும் வெளியிட்டுள்ளது.

அதாவது சுமார் 1,400 கிமீ தரை இலக்கைத் தாக்கவல்ல இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்துள்ள ஈரான், அந்த ஏவுகணைகளில் ‘இஸ்ரேல் அழிக்கப்பட வேண்டும்’ என்ற வாசகத்தையும் எழுதியுள்ளதாக ஃபார்ஸ் நியூஸ் செய்தி தெரிவிக்கிறது.

அமெரிக்க துணை அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு சென்றதையடுத்து இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுடன் ஈரான் அணு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது, இதனையடுத்து ஈரான் ராணுவம் தங்களது பலத்தை வெளி உலகுக்குக் காட்டும் வகையில் இத்தகைய ஏவுகணை சோதனைகளைச் செய்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY