ஊக்க மருந்தில் சிக்கிய பிரபலங்கள் இவர்கள்தான்

0
113

ஷரபோவாவை போல ஊக்க மருந்து சோதனையில் சிக்கி இருந்த பிரபல விளையாட்டு வீரர்கள் வருமாறு:–

பென்ஜான்சன்: கனடாவை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரரான இவர் 1988 சியோல் ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். ஊக்க மருந்தால் இவரது தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டது.

மரடோனா: பிரபல கால்பந்து ஜாம்பவான் மரடோனா 1994 உலககோப்பையில் ஊக்க மருந்தில் சிக்கினார். இதற்காக 15 மாதம் தடை விதிக்கப்பட்டது. 2–வது முறையாகவும் அவர் சிக்கி இருந்தார்.

பீட்டர் கொர்டா: உலக தரவரிசையில் 2–வது இடம் பெற்று இருந்த டென்னிஸ் வீரர் பீட்டர் கொர்டா (செக்குடியரசு) 1998–ல் ஸ்டிராய்ட் நன்ட்ரோலின் வகை ஊக்க மருந்தை பயன்படுத்தினார். இதற்காக அவருக்கு 1 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

இதேபோல ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் வார்னே, சைக்கிள் பந்தய வீரர் ஆம்ஸ்டாங் ஆகியோரும் ஊக்க மருந்தில் சிக்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY