சாய்ந்தமருதில் ஜனூஸின் “மூசாப்பும் ஒரு முழ வெயிலும்“ கவிதை நுால் அறிமுக விழா

0
152

(சப்னி)

அகர ஆயுதம் ஏற்பாட்டில் பிரபல கவிஞரும், திரைப்பட இயக்குனரும், எழுத்தாளருமான சாய்ந்தமருது எஸ்.ஜனுாஸ் அவர்கள் எழுதிய “மூசாப்பும் ஒரு முழ வெயிலும்“ கவிதை நுால் அறிமுக விழா எதிர்வரும் ஞயாயிறு (12) மாலை 04 மணிக்கு சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் கவிஞர் பாலமுனை பாரூக் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களுடன் கெளரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நஸீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், ஐ.எல்.எம். மாஹிர் மற்றும் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆனையாளர் எம்.வை.எம். சலீம் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக கல்முனை பிரதி முதல்வர் முழுக்கம் அப்துல் மஜீத் , முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் அன்ஸில், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர், ஏ.எம் பறக்கத்துல்லாஹ், முன்னாள் காரைதீவு பிரதேசசபையின் எதிர்க் கட்சித்தலைவர் எம்.எச்.எம். இஸ்மாயில், முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல். முனாஸ் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் அஸ்மி அப்து கபூர் அகியோருடன் கலை, இலக்கியம், கல்வி, ஊடக அதிதிகளும் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

கவிஞர் ஜனூஸ் எழுதிய இக்கவிதை நுால் முதற்கட்டமாக ஜனவரியில் கொழும்பிலும், இரண்டாம் கட்டமாக பெப்ரவரியில் இந்தியாவிலும் வெளியானது.

LEAVE A REPLY