விராட் கோஹ்லியுடன் சண்டையிட்டது ஏன்? கவுதம் கம்பீர் விளக்கம்

0
338

ஐபிஎல் தொடரில் பெங்களுர் அணியின் தலைவர் விராட் கோஹ்லியுடன் ஏற்பட்ட மோதல் குறித்து கவுதம் கம்பீர் விளக்கம் அளித்துள்ளார்.

2013ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணித்தலைவர் கோஹ்லியுடன், கொல்கத்தா அணித்தலைவர் கம்பீர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இருவருக்கும் உச்சகட்ட மோதல் ஏற்பட்டதால் மைதானத்தில் பரபரப்பை ஏற்பட்டது. பின்னர் சக வீரர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர்.

இது பற்றி தற்போது செய்தியாளர்களிடம் கம்பீர் கூறுகையில், ”போட்டியின் போது எனக்கு நட்பெல்லாம் ஒன்றும் கிடையாது.

மீண்டும் வாக்குவாதம் செய்ய வேண்டுமென்றால் அதிலிருந்தும் நான் பின்வாங்க மாட்டேன். எதிரணியில் யார் இருக்கிறார்கள் என்பது எனது அணுகுமுறையில் வித்தியாசத்தை ஏற்படுத்தாது.

கண்டிப்பாக களத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகளை தனிநபர் மீதான தாக்குதலாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

டோனியாக இருந்தாலும் சரி, கோஹ்லியாக இருந்தாலும் சரி. தலைவர் எவ்வழியோ வீரர்களும் அவ்வழியே. நான் அடங்கிப் போனால் எனது அணியும் அடக்கப்படும்“ என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY