நிதி மோசடி குற்றச்சாட்டு: நாமல் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக வழக்கு

0
192

நாமல் ராஜபக்‌ஷ எம்.பி. உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால் (FCID) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பணமோசடி தொடர்பான சட்டத்தின் கீழ், கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸின் முன்னிலையில் இன்றையதினம் (09) குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

ரூபா 12.5 கோடியைப் பயன்படுத்தி எயார் லங்கா நிறுவனத்துக்கு சேவை வழங்கும் கவர்ஸ் கோபரேஷன் பிரைவேற் லிமிடெட் நிறுவனத்தை வாங்கியமை தொடர்பிலேயே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்‌ஷ தவிர்ந்த ஏனைய 7 பேருக்கும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதித்த நீதவான், குறித்த நிறுவனத்தின் பெயரில் உள்ள வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் வைப்புகளை முடக்குமாறும் உத்தரவிட்டார்.

(Thinakaran)

LEAVE A REPLY