தேசத்துரோக வழக்கில் முஷாரபுக்கு நீதிமன்றம் அழைப்பு

0
106

தேசத்துரோக வழக்கில் பாகிஸ் தான் முன்னாள் அதிபர் முஷாரப் வரும் 31-ம் தேதி நீதி மன்றத்தில் நேரில் ஆஜராகும் படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டில் பாகிஸ்தானில் அவசர நிலையை முஷாரப் பிரகடனம் செய்தார். இதுதொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டில் அவருக்கு எதிராக தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இஸ்லாமாபாதில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது முஷாரப் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவருக்கு உடல்நலம் சரியில்லை என்று அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

வழக்கு விசாரணையில் ஒரே ஒருமுறை மட்டுமே முஷாரப் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். பலமுறை அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டும் உடல்நிலையைக் காரணம் காட்டி அவர் ஆஜராகாமல் நீதிமன்றத்தை தவிர்த்து வருகிறார்.

நேற்றைய விசாரணையின் போது வரும் 31-ம் தேதி முஷாரப் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று 3 நீதிபதி கள் அடங்கிய அமர்வு, சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.

LEAVE A REPLY