இந்தோனேசியாவில் முழுமையாக தெரிந்த சூரிய கிரகணம்

0
178

இந்தோனேசியாவில் சூரிய கிரகணம் முழுமையாக தெரிந்தது. இதனால் பகல் இருட்டாக மாறியது.

சூரியனுக்கும், பூமிக்கும் நடுவில் சந்திரன் வரும் போது சூரியஒளி மறைக்கப்படுகிறது. அதுவே சூரிய கிரகணம் என்றழைக்கப்படுகிறது. இந்த சூரிய கிரகணம் இன்று காலை 6.20 மணி முதல் 6.50 வரை ஏற்பட்டது.இந்த சூரிய கிரகணம் ஆசியா, ஆஸ்திரேலியா கண்டத்தில் உள்ள நாடுகளில் தெளிவாக தெரிந்தது.

குறிப்பாக இந்தோனேசியா மற்றும் பசிபிக் நாடுகளில் முழுமையாக ஏற்பட்டது.இதனால் பகல் நேரம் இருட்டாக மாறியது. இந்தோனேசியாவில் பைலிடங் மாகாணத்தில் முழு சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்தது. அங்குள்ள ஆலிவியர் கடற்கரையில் திரளாக கூடிநின்று சூரிய கிரகணத்தை பொதுமக்கள் ரசித்தனர்.

அவர்களில் சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் இருந்தனர். அவர்களில் ஆஸ்திரேலியா மற்றும் ஐரேப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் அடங்குவர்.

அவர்கள் சூரிய கிரகணத்தை போட்டோ எடுத்தனர்.மேலும், சுமத்ரா, போர்னியோ, கலாவேசி பகுதிகளிலும் சூரியகிரகணம் தெரிந்தது. அங்கு சுமார் 4 மணி நேரம் இது நீடித்தது. மாபா, மலுகு தீவுகளில் 2 முதல் 3 நிமிடங்கள் நேரம் பகல் நேரம் கும்மிருட்டாக மாறியது.தென்சீனா, தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்காவின் ஹவாஸ், அலாஸ்கா ஆகிய பகுதிகளில் பாதி அளவு சூரிய கிரகணம் தெரிந்தது.

சூரிய கிரகணத்தை வெறுங் கண்ணால் பார்க்க கூடாது என வானியல் வல்லுனர்கள் அறிவுறுத்தி இருந்தனர். எனவே டெலஸ்கோப், காமிராக்கள் மற்றும் சிறப்பு கண்ணாடிகள் மூலம் சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

LEAVE A REPLY