ஷரபோவா பயன்படுத்திய மருந்தின் ரகசியம் வெளியானது

0
120

சமீப காலங்களில் ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய வீரர்-வீராங்கனைகளில் பலர் ‘மெல்டோனியா’ என்னும் ஊக்க மருந்தை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து வீரர்கள் புத்துணர்ச்சியுடன் செயல்படவும், திறனை அதிகரிக்கவும் உறுதுணையாக இருப்பது ஆய்வில் தெரியவந்ததால் ஊக்க மருந்து தடைபட்டியலில் கடந்த ஜனவரி 1-ந்தேதி சேர்க்கப்பட்டது.

இருதயத்துக்கு ரத்த ஓட்டம் குறைவாக செல்லும் நபர்களுக்கு இந்த மருந்தை பயன்படுத்த டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. இதனை உட்கொண்டால் மூச்சு விடுவதில் எந்த சிரமமும் இருக்காது. இந்த மருந்து லாத்வியா நாட்டில் தயாரிக்கப்படுகிறது.

ரஷியாவில் பலர் இதனை பயன்படுத்தி வருகிறார்கள். அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இந்த மருந்தை உபயோகப்படுத்த இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.

LEAVE A REPLY