மூன்று பெரிய நிறுவனங்கள் மரிய ஷரபோவாவை தற்காலிகமாக பணி நீக்கம்

0
142

டென்னிஸ் வீராங்கனை மரிய ஷரபோவா ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளுக்கான ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்திருப்பதாக தெரிவித்ததையடுத்து அவருக்கு வழங்கிவந்த ஆதரவை மூன்று பெரிய நிறுவனங்கள் விலக்கிக்கொண்டுள்ளன.

ஜெர்மனியின் சொகுசு கார் நிறுவனமான போர்ஷ், சுவிட்ஸர்லாந்து நாட்டின் கடிகார நிறுவனமான டேக் ஹொய, நைகி ஆகிய நிறுவனங்கள் தங்கள் விளம்பரத் தூதர் பதவியிலிருந்து ஷரபோவாவை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளன.

ரத்த ஓட்டம் தடைபடுவதை சரிசெய்யும் மருந்தான மெல்டோனியம் அருந்தியிருக்கிறாரா எனச் செய்யப்பட்ட சோதனையில் தான் தோல்வியடைந்ததாக திங்கட்கிழமையன்று மரிய ஷரபோவா தெரிவித்தார்.

கடந்த பத்தாண்டுகளாக அந்த மருந்தைத் தான் உட்கொண்டுவருவதாகவும் கடந்த டிசம்பரில் தடைசெய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலில் அந்த மருந்து சேர்க்கப்பட்டதைத் தான் கவனிக்கவில்லையென்றும் ஷரபோவா கூறியிருக்கிறார்.

ஐந்து முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கும் ஷரபோவா, இதனால், தன் விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வராது எனத் தான் நம்புவதாகத் தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY