சிப்லி பாறுகின் முயற்சியினால் குடைக்காரர் வீதி செப்பனிடும் பணிகள் ஆரம்பம்

0
139

எம்.ரீ. ஹைதர் அலி

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக்கிடம் கடந்த 2016.02.25ஆந்திகதி புதிய காத்தான்குடி முஹைதீன் பெரிய ஜூம்மா பள்ளிவாயல் வீதியின் குடைக்காரர் வீதியில் வசிக்கும் பொதுமக்கள் வீதி செப்பனிடப்படாமல் இருப்பதனால் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் அதனை சீர்செய்து தருமாறும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கிடம் வேண்டுகோள் ஒன்றினை முன் வைத்திருந்தனர்.

அதனை நேரில் சென்று பார்வையிட்ட மாகாண சபை உறுப்பினர் இவ்வீதியினை விரைவாக சீர்செய்து செப்பனிடுவதற்கான ஆலோசனைகளையும் வேண்டுகோளினையும் காத்தான்குடி நகரசபைக்கு விடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து நகர சபையினால் அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இவ்வீதி செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முதல் கட்டமாக கிரவல் இட்டு மட்டப்படுத்தப்பட்டு செப்பனிடும் பணிகள் நகர சபையினால் ஆரம்பிக்கப்பட்டன.

இவ்வீதி செப்பனிடும் பணிகளை 2016.03.08ஆந்திகதி செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்ட மாகாண சபை உறுப்பினர் இவ் வீதியினை நேர்த்தியாகவும் சிறப்பாகவும் அமைப்பதற்கு காத்தான்குடி நகரசபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர் மற்றும் அதற்குரிய அதிகாரிகளிடமும் ஆலோசனைகளை வழங்கினார்.

LEAVE A REPLY