மிதி வெடிகள் அகற்றும் பணிகள் -இராணுவத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில்- தீவிரமாக முன்னெடுப்பு

0
162
பழுலுல்லாஹ் பர்ஹான்
கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற பாரிய யுத்த அனர்த்தத்தின் போது புதைக்கப்பட்ட மிதி வெடிகள் அகற்றும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக வாழைச்சேனை பொலிஸ் பிரிவுற்குட்பட்ட கும்புறுமூலை பாசிக்குடா வீதிற்கு அருகாமையிலுள்ள காட்டுப் பகுதியில் (வணப் பகுதியில்) புதைக்கப்பட்ட மிதி வெடிகள் அகற்றும் பணிகள் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வருகின்றன.
மேற்படி மிதி வெடிகள் அகற்றும் பணிகளில் 231வது இராணுவப் படைப் பிரிவின் மிதி வெடி அகற்றும் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த மிதி வெடிகள் அகற்றும் பகுதிகளில் சிவப்பு மற்றும் மஞ்சல் மிதி வெடி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0e17a7a7-15d0-47db-9ca9-680e6edde9aa 6944a508-f7a7-4a22-b088-176395f1cca3 13383a52-57f7-4d86-9365-52b54b2516d7 bc24e5ca-2035-4474-9829-f035024c4125 de877e99-e446-465d-b54b-c8eb20bd496d e94e69bf-a891-47e6-be21-b91bf87cbf95 eb66276a-f72a-405c-95b0-f67d69f8a9cb

LEAVE A REPLY