மட்டக்களப்பு சிறைச்சாலையில் சர்வதேச மகளிர் தின வைபவமும், மருத்துவ முகாமும்

0
118

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மார்ச் மாதம் 8ம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சர்வதேச மகளிர் தின வைபவமும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளுக்கான மருத்துவ முகாமும் நேற்று 08 செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு சிறைச்சாலையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு காவியா பெண்கள் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் கே.எம்.யூ.எச்.அக்பர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் மட்டக்களப்பு காவியா பெண்கள் சமூக அமைப்பின் பணிப்பாளர் திருமதி அஜித் குமார்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மனநல வைத்திய நிபுனர் டயான்,மட்டக்களப்பு சிறைச்சாலை ஜெயிலர் கே.அருள்வானன்,சிறைச்சாலை புனர்வாழ்வு உத்தியோகத்தர்களான வி.சுசிதரன்,சித்தி சபீனா,சுதாகரன்,சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர்கள்,காவியா பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு காவியா பெண்கள் சமூக அமைப்பினால் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகள் மற்றும் சந்தேக நபர்களுக்கு உதவிப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டதுடன், மருத்துவ பரிசோதனையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

1a4f1c26-e439-44d7-a7f0-b05b08137adf 6e4e1818-cabd-4e09-b97b-8a1bad338ea3 694aee18-ff56-4a1d-be9f-e261bc7d3607 a8e8e05d-655b-4adc-9646-0919b8bf5cd7

LEAVE A REPLY