டி20 உலகக்கிண்ணம்: தகுதிச் சுற்றில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

0
139

டி20 உலகக்கிண்ணத்தின் தகுதிச் சுற்று இன்று தொடங்கியது. இன்று நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் – ஸ்காட்லாந்து அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க ஆட்டகாரராக களமிறங்கிய விக்கெட் கீப்பர் முகமது ஷெசாத் அதிரடியாக விளையாடி 39 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். மற்றொரு வீரரான அஸ்கர் 55 ரன்கள் எடுத்தார். இறுதியில் அந்த அணி 5 விக்கெட்களை இழந்து 170 ரன்கள் குவித்தது.

171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஸ்காட்லாந்து. தொடக்க ஆட்டகாரராக களமிறங்கிய ஜார்ஜ் முன்ஷெவும்(40), கைல் கோட்செரும்(41) அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் குவித்தனர். ஆனால் அதன் பிறகு களமிறங்கிய வீரர்கள் அதிரடியாக ஆட முடியாமல் போனதால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 156 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் ஆப்கானிஸ்தான் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்டநாயகனாக ஷெசாத் தேர்வு செய்யப்பட்டார்.

LEAVE A REPLY