நேபாள காங்கிரஸ் தலைவர் தேர்தல்: முன்னாள் பிரதமர் ஷெர் பகதூர் தியுபா வெற்றி

0
122

நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வந்த முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா கடந்த மாதம் திடீர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

இந்த நிலையில் அந்தக் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு, காட்மாண்டுவில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. புதிய தலைவர் தேர்தலில் முன்னாள் பிரதமர் ஷெர் பகதூர் தியுபா, ராம் சந்திர பாவுடேல், கிருஷ்ண சிட்டாவுலா ஆகிய 3 பேர் போட்டியிட்டனர்.

முதல் சுற்று தேர்தலில் ஷெர் பகதூர் தியுபா, வெற்றி பெறத் தேவையான ஓட்டுகளில் 11 ஓட்டுக்கள் குறைவாக பெற்றார். எனவே 2-வது சுற்று தேர்தல் நடத்தப்பட்டது. முதல் சுற்று தேர்தலில் மூன்றாவது இடத்தை பிடித்த கிருஷ்ண சிட்டாவுலா போட்டியில் இருந்து விலக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து ஷெர் பகதூர் தியுபாவுக்கும், ராம்சந்திர பாவுடேலுக்கும் நேரடி போட்டி ஏற்பட்டது. இதில் ஷெர் பகதூர் தியுபா வெற்றி பெற்றார். அவருக்கு 1,822 ஓட்டுக்கள் கிடைத்தன. தோல்வியைத் தழுவிய ராம்சந்திர பாவுடேலுக்கு 1,296 ஓட்டுக்கள் மட்டும் கிடைத்தன.

நேபாள காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷெர் பகதூர் தியுபாவுக்கு வயது 69. 3 முறை அவர் அங்கு பிரதமர் பதவி வகித்தவர் ஆவார்.

LEAVE A REPLY