டி20 உலகக்கிண்ணம்: தகுதிச் சுற்றில் ஹாங்காங்கை வீழ்த்தியது ஜிம்பாப்வே

0
162

டி20 உலகக்கிண்ணத்தின் தகுதிச் சுற்று இன்று தொடங்கியது. இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஜிம்பாப்வே- ஹாங்காங் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஹாங்காங் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் சிபான்டா 46 பந்தில் 59 ரன்னும், சிகும்புரா அவுட்டாகாமல் 13 பந்தில் 30 ரன்னும் எடுக்க ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங்காங் அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் அட்கின்சன் 44 பந்தில் 53 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்தார். இதை பயன்படுத்தி 6-வது நபராக களம் இறங்கிய தன்வீர் அப்சல் 17 பந்தில் 31 ரன்கள் எடுத்து கடைசி வரை அணியை வெற்றி பெற முயற்சி செய்தார். ஆனால், மற்ற பேட்ஸ்மேன்கள் விரைவில் அவுட்டாக, ஹாங்காங் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஜிம்பாப்வே அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

LEAVE A REPLY