எய்ட்ஸ் என கூறப்பட்ட சிறுவனுக்கு கண்டி கல்லூரியில் கற்க இணக்கம்

0
199

சர்சைக்குரிய குளியாப்பிட்டிய சிறுவனுக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு கண்டி திருத்துவக் கல்லூரி இணக்கம் தெரிவித்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சிறுவனின் கல்விக்கான அனைத்து செலவுகளையும் ஏற்பதற்கும் திருத்துவக் கல்லூரி இணங்கியுள்ளது.

இதன் பொருட்டு கல்வி அமைச்சும் திரித்துவக் கல்லூரிக்கும் இடையில் இணக்கம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சிறுவனுடன் அவரது தயாரும் கண்டி பிரதேசத்தில் வாழ்வதற்கான வசதிகளை கல்வி அமைச்சு ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த சிறுவனின் தந்தைக்கு எயிட்ஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். அதன் பிறகு சிறுவனின் தாய்க்கும் எயிட்ஸ் தொற்றுள்ளது என கூறப்பட்ட நிலையில் அந்த சிறுவன் கல்வி கற்ற பாடசாலையில் அவனை கல்வி கற்க அனுமதிக்க கூடாது என அந்த பாடசாலையின் ஏனைய மாணவர்களின் பெற்றோர்கள் ஆர்பாட்டங்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கண்டி திருத்துவக் கல்லூரி, குறித்த சிறுவனுக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளமை பாராட்டுக்குரிய விடயமாகும்

LEAVE A REPLY