டி20 உலகக்கிண்ண சாதனைகள் -முழு விபரம்

0
286

டி20 தொடர் போட்டிகள் இன்று முதல் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் களைகட்டவுள்ளது.

மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் முதல் சுற்று, சூப்பர்-10 சுற்று என்று இரண்டு வகையாக நடைபெறுகிறது.

முதல் சுற்றுப் போட்டிகளில் ’ஏ‘, ’பி’ பிரிவுகளாக 8 அணிகள் மோதுகின்றன. அதேபோல் சூப்பர்-10 சுற்றில் முக்கிய அணிகள் பங்கேற்கின்றன.

இந்நிலையில் கடந்த உலகக்கிண்ணப் போட்டிகளில் படைக்கப்பட்ட சில சாதனைகளை பற்றி பார்க்கலாம்.

சாம்பியன் யார்?

2007ம் ஆண்டு உலகக்கிண்ணம்: இந்தியா (பாகிஸ்தானை 5 ஓட்டங்களால் வீழ்த்தியது)

2009ம் ஆண்டு உலகக்கிண்ணம்: பாகிஸ்தான் (இலங்கையை 8 விக்கெட்டுகளால் வீழ்த்தியது)

2010ம் ஆண்டு உலகக்கிண்ணம்: இங்கிலாந்து (அவுஸ்திரேலியாவை 7 விக்கெட்டுகளால் வீழ்த்தியது)

2012ம் ஆண்டு உலகக்கிண்ணம்: மேற்கிந்திய தீவுகள் (இலங்கையை 36 ஓட்டங்களால் வீழ்த்தியது)

2014ம் ஆண்டு உலககிண்ணம்: இலங்கை (இந்தியாவை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தியது)

இமாலய ஓட்டங்கள்:

2007ம் ஆண்டு உலகக்கிண்ணம்: கென்யாவுக்கு எதிராக இலங்கை 260- 6 ஓட்டங்கள் எடுத்தது.

2007ம் ஆண்டு உலகக்கிண்ணம்: இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 218- 4 ஓட்டங்கள் எடுத்தது.

2009ம் ஆண்டு உலகக்கிண்ணம்: ஸ்காட்லாந்துக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா 211- 5 ஓட்டங்கள் எடுத்தது.

2007ம் ஆண்டு உலகக்கிண்ணம்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா 208- 2 ஓட்டங்கள் எடுத்தது.

2007ம் ஆண்டு உலகக்கிண்ணம்: தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் 205- 6 ஓட்டங்கள் எடுத்தது.

சொற்ப ஓட்டங்கள்:

இலங்கைக்கு எதிராக 10.3 ஓவரில் 39 ஓட்டங்களில் சுருண்டது நெதர்லாந்து.

இலங்கைக்கு எதிராக 15.3 ஓவரில் 60 ஓட்டங்களில் சுருண்டது நியூசிலாந்து.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 16.4 ஓவரில் 68 ஓட்டங்களில் சுருண்டது அயர்லாந்து.

நேபாளுக்கு எதிராக 17 ஓவரில் 69 ஓட்டங்களுக்கு சுருண்டது ஹாங் காங்.

வங்கதேசத்திற்கு எதிராக 17.1 ஓவரில் 72 ஓட்டங்களில் சுருண்டது ஆப்கான்.

இவை அனைத்தும் 2014ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் நடந்தவை.

இமாலய வெற்றி:

2007ம் ஆண்டு உலகக்கிண்ணத்தில் இலங்கை 172 ஓட்டங்களால் கென்யாவை வீழ்த்தியது.

2009ம் ஆண்டு உலகக்கிண்ணத்தில் தென்ஆப்பிரிக்கா 130 ஓட்டங்களால் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது.

2007ம் ஆண்டு உலகக்கிண்ணத்தில் அவுஸ்திரேலியா 10 விக்கெட்டுகளால் இலங்கையை வீழ்த்தியது.

2012ம் ஆண்டு உலகக்கிண்ணத்தில் தென்ஆப்பிரிக்கா 10 விக்கெட்டுகளால் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது.

தனி நபர் அதிக ஓட்டங்கள்:-

டி20 உலகக்கிண்ணப் போட்டிகளில் ஜெயவர்த்தனே அதிக ஓட்டங்களை குவித்துள்ளார். அவர் 31 போட்டிகளில் 1,016 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

கிறிஸ் கெய்ல் (23 போட்டி, 807 ஓட்டங்கள்), டில்ஷான் (31போட்டி, 764 ஓட்டங்கள்), சங்கக்காரா (31போட்டி, 661 ஓட்டங்கள்), மெக்கல்லம் (25போட்டி, 637 ஓட்டங்கள்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

அதிக விக்கெட்டுகள்:-

டி20 உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியர்வர்கள் பட்டியலில் மலிங்கா (31 போட்டி, 38 விக்கெட்) முதலிடத்தில் உள்ளார்.

சாகித் அஜ்மல் (23 போட்டி, 36 விக்கெட்), அஜந்தா மெண்டீஸ் (21 போட்டி, 35 விக்கெட்), உமர் குல் (24 போட்டி, 35 விக்கெட்), அப்ரிடி (30 போட்டி, 35 விக்கெட்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

LEAVE A REPLY