‘மா மா’ மரத்திலொரு
‘காக்கா’ வசித்தது.
‘அம் மா’ மரத்தில்
‘அப் பா’விக் குயிலொன்று
‘பாட்டி’சைத்தது.
நா’தம் பி’ழைக்காது
ச’தங்கை’ ஒலி போன்று
கீதம் இசைத்ததை
‘அக் கா’கம் கீழிருந்து
‘அண்ணா’ர்ந்து பார்த்து
‘நானா’ நீயா யார்
‘பெரியப் பா’டகன் என்று
பாடிய கதையைப் போன்றே
மனிதர்கள் சிலரும்
மற்றவர் போல்
வாழ முனைந்து
தோல்வி அடைவர்.
-MOHAMED NIZOUS-