மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் கிரகிப்பும் பிரயோகிப்பும் மிக முக்கியமானதாகும்: அப்துர் ரஹ்மான்.

0
253

(அஹ்மத் இர்ஷாத்)

தனியார் துறை கல்வி நிறுவனங்களில் முக்கியமாக கற்பித்தலின் தரத்திற்கும் மாணவர்களின் ஒழுக்கத்திற்கும் முகியத்துவம் கொடுக்கப்படும் தனியார் துறை நிறுவனங்களில் கல்வி கற்பிக்கப்படுதலின் பொழுது இரண்டு முக்கியமான விடயங்களாக கற்பித்தலின் தரமும் மாணவர்களின் ஒழுக்கத்துடன் கலந்த பழக்கவழக்கங்களும் கருத்தில் கொள்ளப்படும்.

ஒழுக்கம் இல்லாத கல்வியானது எந்த அடைவுகளையும் தராது. அந்த அடிப்படையிலே இஸ்லாத்தின் பார்வையிலும் கூட ஷைத்தான் எனப்படுபவன் பெரிய அறிவாளியாக இருந்தும் ஒழுக்கமும் இறை கட்டுப்பாடும் இல்லாத காரணத்தினால் அல்லாஹ்வாலும் மனித சமூதாயத்தினாலும் சபிக்கப்பட்டான் என இஸ்லாம் மார்க்கத்தில் முக்கிய விடயமாக கூறப்படுகின்றது.

அறிவு மட்டும் ஒருவருக்கு உயற்சியினை கொடுப்பதில்லை. ஆனால் மாறாக மாணவனுடைய ஒழுக்கமும் அவனுடைய நன் நடத்தையுமே அவனுடைய உயற்சியினை சமூதயத்தில் எடுத்துக்காட்டுகின்றது என இலங்கையில் முன்னணி தனியார் கல்வி நிறுனங்களில் ஒன்றாக செயற்பட்டு வரும் BCAS தனியார் பல்கலைகழகத்தின் தவிசாளரும் பொறியியலாளருமான அப்துர் ரஹ்மான் கடந்த 6.03.2016 ஞாயிறுக்கிழமை மட்டக்களப்பு கிரீன் காடன் ஹோட்டலில் இடம் பெற்ற மானவர்களுக்கான கருத்தரங்கில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY