10 பிக்குகளை கைது செய்தால் 100 பேர் சுயமாக சிறை செல்வர்

0
209

நாட்­டுக்­கா­கவும் பௌத்த மதத்­துக்­கா­கவும் குரல் கொடுக்கும் பௌத்த குரு­மார்கள் எதிர்­கா­லத்தில் 10பேர் கைது செய்­யப்­பட்டு சிறையில் அடைக்­கப்­பட்டால் அவர்­க­ளுக்­காக மேலும் 100 குரு­மார்கள் தமது விருப்­பத்தின் பேரில் சிறைக்குச் செல்லும் வேலைத் திட்­ட­மொன்று மாவட்ட ரீதியில் வடி­வ­மைக்­கப்­ப­ட­வுள்­ளது என சிங்­கள ராவய அமைப்பின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் தெரி­வித்தார்.

ஹோமா­கம நீதி­மன்ற விவ­காரம் தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் இந்­நாட்டில் சட்டம் அனை­வ­ருக்கும் சம­மா­ன­தாக இல்லை. நீதி­மன்­றுக்கு கல்­லெ­றிந்த அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் ஒரு­நாளில் பிணையில் விடப்­பட்டார்.

இதே­போன்று பாரிய குற்­றத்­துக்­குள்­ளான ஹிரு­னிக்கா ½ மணித்­தி­யா­ல­யத்தில் பிணையில் விடப்­பட்டார். ஆனால் நீதி­மன்­றுக்கு வெளியில் கலகம் விளை­வித்­த­தாக குரு­மார்கள் 14 நாட்கள் விளக்­க­ம­றி­யலில் தடுத்து வைக்­கப்­பட்­டார்கள். இதுதான் எமது நாட்டின் சட்டம்.

எமது நாட்டை ஆங்­கி­லேயர் ஆட்சி செய்­த­போது ஆங்­கி­லேயர் ஆட்­சிக்­கா­லத்தில் பௌத்த குருமார் சிறை­வைக்­கப்­பட்­டனர். அதன் பின்பு இப்­போதே குருமார் சிறையில் வைக்­கப்­ப­டு­கி­றார்கள். இன்று இரா­ணுவ வீரர்கள் சிறைக்குள் தள்­ளப்­ப­டு­கி­றார்கள்.

எல்.ரீ.ரீ.ஈ. உறுப்­பி­னர்கள் விடு­தலை செய்­யப்­ப­டு­கி­றார்கள். பாதாள கோஷ்­டியை சிறை­யி­லி­ருந்து விடு­விக்­கி­றார்கள் குரு­மார்­களை சிறை­வைக்­கி­றார்கள்.

எதிர்­வரும் காலங்­களில் குரு­மார்கள் கைது செய்­யப்­பட்டு சிறையில் அடைக்­கப்­ப­டு­வ­தற்கு எதி­ராக குரு­மார்கள் செயலில் இறங்­க­வுள்­ளார்கள். குரு­மார்கள் பிரி­வு­களை நோக்­காது அனை­வ­ரையும் ஒன்­றி­ணைக்கும் பணிகள் மாவட்ட ரீதியில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன.

சமூ­கத்­துக்­கா­கவும் தேசிய நல­னுக்­கா­கவும் குரல்­கொ­டுக்கும் குரு­மார்கள் எதிர்­கா­லத்தில் 10 பேர் கைது செய்­யப்­பட்டால் விருப்­பத்­துடன் மேலும் 100 பேர் சிறைக்குச் செல்லும் திட்டம் வகுக்கப்படவுள்ளது.

சகல பிரிவுகளையும் சேர்ந்த குருமார்கள் கருத்து வேறுபாடுகளின்றி இத்திட்டத்தில் இணைந்து கொண்டு வருகிறார்கள் என்றார்.

-Vidivelli-

LEAVE A REPLY