மரியா ஷரபோவா ஒலிம்பிக் போட்டிகளில் நிச்சயம் விளையாடுவார்: ரஷ்யா

0
43

போதைப் பொருள் சர்ச்சையில் சிக்கியுள்ள மரியா ஷரபோவா நிச்சயம் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்ப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா(28) போதைப்பொருள் பயன்படுத்தியது சோதனையில் உறுதியாகி உள்ளது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ளவிருந்த நிலையில் அவருக்கு போதைப் பொருள் சோதனை நடத்தப்பட்டது. அதில் மரியா ஷரபோவா தோல்வியுற்றுள்ளார்.

ஷரபோவா போதைப் பொருள் பயன்படுத்தியது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு எதிரான அளவுக்கு அதிகமாக மெக்னீசியம் எடுத்துக் கொண்டது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 10 வருடங்களாக அவர் போதைப் பொருள் பயன்படுத்தி வந்துள்ளார் என்பது சோதனையில் தெரியவந்துள்ளது.

இதனை உறுதி செய்த சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு, மார்ச் 12-ம் தேதி முதல் ஷரபோவா டென்னிஸ் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவார் என்று கூறியுள்ளது.

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா இதுவரை 5 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.

போதைப் பொருள் எடுத்துக் கொண்டதை மரியா ஷரபோவாவும் ஒப்புக்கொண்டார்.

இது குறித்து மரியா ஷரபோவா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நான் ஒரு பெரிய தவறு செய்துவிட்டேன். என்னுடைய ரசிகர்களையும், விளையாட்டினையும் தலைகுனிய வைத்துவிட்டேன். இதற்கு நான் முழு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

நான் இந்த வழியில் இத்துடன் என் வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்பவில்லை. மீண்டும் விளையாட எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்பிக்கையோடு இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் மரியா ஷரபோவா பங்கேற்பார் என்று எதிர்பார்ப்பதாக ரஷ்ய டென்னிஸ் சங்கத் தலைவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY