அமைச்சர் டி.வி.உபுலுக்கு பிணை

0
122

தென் மாகாண சபையின் மீன்பிடி அமைச்சர் டி.வி.உபுல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று திஸ்ஸமஹராம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேகநபரை 50,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நபரொருவரைத் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், டி.வி.உபுல் திஸ்ஸமஹராம பொலிஸில் சரணடைந்ததன் பின்னர் கைதுசெய்யப்பட்டார்.

கடந்த 5ம் திகதி நபரொருவரைத் தாக்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதோடு, தாக்குதலுக்கு இலக்கானவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY