அமெரிக்காவின் தடையை மீறி கண்டம்விட்டு கண்டம் பாய்ந்துச் சென்று தாக்கும் ஏவுகணையை பரிசோதித்தது ஈரான்

0
259

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரத் தடை என்ற கடிவாளம் சமீபத்தில் விலக்கப்பட்ட நிலையில் தனது நாட்டின் ஆயுத வல்லமையை அண்டை நாடுகளுக்கு பறைசாற்றும் விதமாக கண்டம்விட்டு கண்டம் பாய்ந்துச் சென்று தாக்கும் ஏவுகணையை ஈரான் இன்று பரிசோதித்துள்ளது.

சர்வதேச பொருளாதார தடை நீக்கப்பட்ட நிலையிலும், கடந்த ஜனவரி மாதம் ஈரானின் ஏவுகணை திட்டங்களுக்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது. ஆனால், இந்த தடையை மீறிய வகையில் ‘எதற்கும் நாங்கள் தயார்’ என்ற பாணியில் இன்றைய ஏவுகணை பரிசோதனையை ஈரான் நடத்தியுள்ளது, குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY