மனைவி என்னை விட்டு பிரிந்தால் விமானத்தை மோத விட்டு பயணிகளை கொல்வேன்: விமானி மிரட்டல்

0
151

‘மனைவி என்னை விட்டு பிரிந்தால் விமானத்தை மோத விட்டு 200 பயணிகளை கொல்வேன்’ என விமான அதிரடி மிரட்டல் விடுத்தார்.

இத்தாலி தலைநகர் ரோமில் இருந்து ஜப்பானுக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய 200 பேர் தயாராக இருந்தனர்.

அந்த விமானத்தை ஓட்ட 40 வயது விமானி நியமிக்கப்பட்டிருந்தார். விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விமான நிலைய அதிகாரிகளுக்கு விமானி செல்போனில் ஒரு தகவல் அனுப்பினார்.

அதில், எனது மனைவி என்னை விட்டு பிரிந்து விடுவதாக அறிவித்து விட்டாள். இதனால் நான் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறேன்.

எனவே நான் தற்கொலை செய்ய முடிவு எடுத்து விட்டேன். விமானத்தை எங்காவது மோத வைத்து 200 பயணிகளையும் கொலை செய்து விட்டு, நானும் மடிவேன்’ என தெரிவித்து இருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அந்த விமானத்தை ரோம் நகரில் உள்ள பியூமாசினோ விமான நிலையத்தில் இருந்து புறப்படவிடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும் தற்கொலை மிரட்டல் விடுத்த விமானியை விமானத்தில் இருந்து இறக்கினர். அவருடன் இருந்த மற்றொரு சக விமானி விமானத்தை ஓட்ட அனுமதித்தனர். இதன் மூலம் நடைபெற இருந்த மிகப்பெரிய சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டது.

LEAVE A REPLY