ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் டோனியே உலகின் சிறந்த வீரர்: விராட் கோலி ப

0
147

ஆசிய கிண்ண 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வங்காளதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றது.இந்த ஆட்டத்தில் டோனி 4–வது வீரராக களம் இறங்கி அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். 6 பந்தில் 2 சிக்சர், 1 பவுண்டரியுடன் அவர் 20 ரன்களை எடுத்தார். நெருக்கடியான நேரத்தில் அவர் களம் இறங்கி சிக்சர்கள் அடித்தது பாராட்டுதலுக்கு உரியது.

ஆசிய கிண்ணத்தை வென்றதன் மூலம் தன் மீதான விமர்சனத்துக்கு அவர் தொடர்ந்து பதிலடி கொடுத்தார்.

இறுதிப்போட்டியில் தவானுடன் இணைந்து சிறப்பாக விளையாடி 41 ரன்களை எடுத்த அணியின் துணை கேப்டன் விராட் கோலி டோனியை புகழ்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:–நானும், தவானும் ஆட்டத்தை நேர்த்தியாக கொண்டு சென்றோம். ரன்ரேட்டை உயர்த்துவது தான் எனது இலக்காக இருந்தது. தவான் ஆட்டம் இழந்தபோது ஒரு ஓவருக்கு 3 பவுண்டரி வரை அடிக்க வேண்டிய நெருக்கடி இருப்பதை உணர்ந்தேன்.ஆனால் டோனி களம் இறங்கியதுமே அதிரடியாக ஆடினார். அவர் தனது அபாரமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார்.

ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் டோனியே உலகின் சிறந்த வீரர் ஆவார்.இந்த ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. ஆசிய கோப்பையை வென்றது எங்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது உலக கோப்பைக்கு மிகப்பெரிய உந்துதலாக இருக்கும்.இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.

LEAVE A REPLY