20 ஓவர் உலக கிண்ணம்: முதல் ஆட்டத்தில் ஆங்காங் – ஜிம்பாப்வே இன்று மோதல்

0
124

20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படுகிறது.இந்தப் போட்டி இன்று தொடங்கி ஏப்ரல் 3–ந்தேதி வரை 7 நகரங்களில் நடக்கிறது.இந்த போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. ‘டாப் 10’ அணிகள் நேரடியாக முதன்மை சுற்றில் விளையாடும்.

மீதியுள்ள 8 நாடுகள் தகுதி சுற்றில் விளையாடி பங்கேற்கும்.இதில் இருந்து இரண்டு அணி முதன்மை சுற்றிக்கு தகுதி சுற்றில் விளையாடும் 8 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.‘ஏ’ பிரிவில் வங்காள தேசம், அயர்லாந்து, நெதர்லாந்து, ஓமன் அணிகளும், ‘பி’ பிரிவில் ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், ஆங்காங், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.தகுதி சுற்று ஆட்டம் இன்று தொடங்கி 13–ந் தேதி வரை நடக்கிறது.

இன்றைய தொடக்க நாளில் 2 ஆட்டங்கள் நடக்கிறது.‘பி’ பிரிவில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே – ஆங்காங் அணிகள் மோதுகின்றன.மசகட்சா தலைமையிலான ஜிம்பாப்வே அணி வெற்றியுடன் கணக்கை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் தற்போது தான் முதல் முறையாக மோத இருக்கின்றன.இன்று நடைபெறும் 2–வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் – ஸ்காட்லாந்து (‘பி’ பிரிவு) அணிகள் மோதுகின்றன. தரவரிசையில் 9–வது இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான் வெற்றியுடன் கண்க்கை தொடங்கும் ஆர்வத்தில் இருக்கிறது.

ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக மோதிய 5 இருபது ஓவர் ஆட்டத்திலும் ஆப்கானிஸ்தான் அணியே வெற்றி பெற்றுள்ளது. இதனால் அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் காணப்படுகிறது.

LEAVE A REPLY