அநுராதபுர மாவட்ட காதி நீதிமன்றத்துக்கு பெண் நீதிபதிகளை நியமிக்குமாறு கோரிக்கை

0
323

(ஹொரவபொத்தனை நஜாத்)

அநுராதபுர மாவட்டத்தில் இயங்கும் முஸ்லிம் விவாக விவாகரத்து வழக்கு விசாரணைகள் நடத்தப்படும் காதி நீதி மன்றங்களுக்கு பெண் நீதிபதிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அநுராதபுர மாவட்ட முஸ்லிம்கள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு கோரிக்கை விடுகின்றனர்

இதனால் வழக்குகளில் தொடர்புபட்ட முக்கியமாக பெண்கள் பூரண திருப்தி அடைவதில்லை என்றும், இவ்வாறான காதி நீதி மன்றங்களில் காதி நீதிவான்கள் ஆண்கள் மாத்திரமே செயற்படுகின்றனர்.

இந்த நிலையில் காதி நீதிவான்கள் சிலரின் தீர்ப்புக்களில் சில சந்தர்ப்பங்களில் பெண்கள் திருப்தியடைய முடியாத நிலை காணப்படுவாகவும் பெண்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

அப்போதுதான் முஸ்லிம்களின் விவாக விவாகரத்து வழக்குத் தீர்ப்புகள் இரு தரப்பினர்களுக்கும் திருப்தியளிக்கும் வகையில் அமையும் என்று சுட்டிக் காட்டப்படுகிறது.

குறிப்பு: பெண்கள் ஆட்சி பொறுப்பில் அமர்த்த படுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லாத காரணத்தினால் நீதி மன்றத்திற்கு வரும் பெண்கள் தங்களின் பிரச்சினைகளை ஆண் நீதிபதியாக இருப்பவரிடம் சொல்ல கூச்ச படுகிறார்கள். ஒரு பெண்ணை விசாரனைக்காக அமர்த்தினால் இலகுவாக இருக்கும் என்று கருதுகின்றனர்.

அவ்வாறு கூச்ச படும் இடத்தில் பெண்களை விசாரனையாளராக நியமிக்களாம் என்பதில் சில மார்க்க அறிஞர்களும் ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY