அறநெறி கற்கும் மூவினங்களைச் சேர்ந்த 300 மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்கள்

0
311

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

சர்வதேச மகளிர் தினத்தைச் சிறப்பிக்கும் முகமாக அறநெறி கற்கும் நான்கு மதங்களையும் சேர்ந்த மாணவர்கள் சுமார் 300 பேருக்கு இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதாக திருகோணமலை உதயம் மறுவாழ்வு அமைப்பின் பொதுச் செயலாளர் ஜே. சர்மிலா தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை 08.03.2016 இடம்பெற்ற இந்நிகழ்வில் பௌத்த, ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களைப் பிற்பற்றும் சமூகங்களைச் சேர்ந்த அறநெறி கற்கும் மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள், எழுது கருவிகள் உள்ளிட்ட இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை ஸ்ரீமாபுர தஹம் பாடசாலை, திருமலைப் பட்டினம் நீதி மன்ற வீதி குணா இந்து அறநெறிக் கல்வி நிலையம், ஜமாலியா இஸ்லாமிய அஹதியா பாடசாலை, லிங்க நகர் யூதா ததேயு மறைக் கல்வி நிலையம் ஆகியவற்றில் கற்கும் மாணவர்களுக்கே இந்த இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

திருகோணமலை உதயம் மறுவாழ்வு அமைப்பின் பொதுச் செயலாளர் ஜே. சர்மிலா, தலைவர் ஐ. கிரிஸாந்தி, உப தலைவர் எஸ். சியாமளாதேவி, பொருளாளர் எஸ். சர்மிளா இணைப்பாளர் எஸ். செல்வேந்திரன் உள்ளிட்டோரும் அறநெறிப் பாடசாலைகளைச் சேர்ந்த பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயப் பெரியார்களும் நான்கு மதங்களையும் சேர்ந்த மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

DBJ_7247 DBJ_7286 DBJ_7288 DBJ_7381 DBJ_7402

LEAVE A REPLY