பேஸ்புக், மின்னஞ்சல் மூலமான மோசடிகள்: கிடைத்துள்ள முறைப்பாடுகள் எவ்வளவு தெரியுமா?

0
125

இவ் வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் இலங்கை கணனி அவசர நடவடிக்கை பிரிவுக்கு 400 முறைப்பாடுகள் வரை கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றில் பெரும்பாலானவை, பேஸ்புக் சமூக வலைத்தளம் தொடர்பிலானது என இலங்கை கணனி அவசர நடவடிக்கை பிரிவின் ஊடகப் பேச்சாளர் ரோஷான் சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார்.

இவற்றில் நூற்றுக்கு 80 வீதமானவை போலி பேஸ்புக் கணக்குகள் பற்றியவை.

இதேவேளை, மின்னஞ்சல் மூலமாக பண மோசடி செய்யும் நடவடிக்கைகள் குறித்து குறித்த காலப் பகுதியில் நான்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இலங்கை கணனி அவசர நடவடிக்கை பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

(அத தெரண)

LEAVE A REPLY