போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதையடுத்து டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தற்காலிக நீக்கம்

0
117

முன்னாள் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா(28) போதைப்பொருள் பயன்படுத்தியது

உறுதியானதையடுத்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ளவிருந்த நிலையில் அவருக்கு போதைப் பொருள் சோதனை

நடத்தப்பட்டது. அதில் மரியா ஷரபோவா தோல்வியுற்றுள்ளார்.

ஷரபோவா போதைப் பொருள் பயன்படுத்தியது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு எதிரான

அளவுக்கு அதிகமாக மெக்னீசியம் எடுத்துக் கொண்டது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 10 வருடங்களாக அவர் போதைப்

பொருள் பயன்படுத்தி வந்துள்ளார் என்பது சோதனையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ஷரபோவா டென்னிஸ் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக மார்ச் 12-ம் தேதி வரை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா இதுவரை 5 முறை கிராம் ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.

இதுவரை இந்த மாதத்தில் மட்டும் போதைப் பொருள் சோதனையில் சிக்கியுள்ள 7 வது வீரர் இவர் ஆகும்.

இது குறித்து மரியா ஷரபோவா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நான் ஒரு பெரிய தவறு செய்துவிட்டேன். என்னுடைய ரசிகர்களையும், விளையாட்டினையும் தலைகுனிய வைத்துவிட்டேன்.

இதற்கு நான் முழு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

நான் இந்த வழியில் இத்துடன் என் வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்பவில்லை. மீண்டும் விளையாட எனக்கு ஒரு

வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY