உலகக்கிண்ண டி20 போட்டி நடைபெறும் 6 மைதானங்களில் இலவச வை-பை

0
119

பதினாறு அணிகள் பங்கேற்கும் 6-வது 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. தகுதிச் சுற்று, சூப்பர்-10 சுற்று என்று இரண்டு வகையாக இந்தப் போட்டிகள் நடைபெறுகிறது.

இதில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.

இந்நிலையில், உலகக்கிண்ண டி20 போட்டி நடைபெறும் 6 மைதானங்களில் இலவச வை-பை சேவையை வழங்க ரிலையன்ஸ் ஜியோ முடிவு செய்துள்ளது.

பெங்களூர் சின்னசாமி மைதானம், தர்மசாலா, கொல்கத்தா ஈடன் கார்டன், மொகாலி, டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மற்றும் மும்பை வான்கடே மைதானம் ஆகிய ஆறு மைதானங்களில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ அதிவேக இலவச வை-பை சேவையை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

போட்டி நடைபெறும் அன்று மட்டும்(24 மணி நேரம்) இந்த இலவச வை-பை சேவை வழங்கப்படவுள்ளது. ப்ரவுசிங் மட்டும் அல்லாமல் ரசிகர்கள் குறிப்பிட்ட அளவு டவுன்லோடு செய்துக்கொள்ளவும் முடியும்.

LEAVE A REPLY