மு.கா.வின் தேசிய மாகாநாடு தொடர்பான பணிகள் குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் ஆராய்வு

0
192

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாகாநாட்டை எதிர்வரும் 19 ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தின் பாலமுனையில் நடத்துவதற்கு தீர்மானிக்கபட்டுள்ள நிலையில், அது தொடர்பான பூர்வாங்க பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் அதன் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று (7) இது தொடர்பில் ஆராயப்பட்டதுடன், மேலதிக நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டதாக கட்சியின் உயர்பீட உறுப்பினரும் தேசிய மகாநாட்டு பிரசார ஊடகக் குழு உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொருளாளருமான ஏ.ஸி. யஹியாகான் தெரிவித்துள்ளார்.

Yahiyakhanமாவட்ட மற்றும் மாகாண ரீதியில் பணிகளை முன்னெடுப்பதற்காக நிமிக்கப்பட்டுள்ள உப குழுக்கள், தேசிய மகாநாட்டுக்கு பேராளர்களை அழைத்து வருவது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது மேலும். ஏற்பாட்டுக் குழுவினருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஆலோசனைகளையும் வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் பிரதியமைச்சரான ஹாரீஸ்,கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர், பிரதியமைச்சர் பைஸல் காசிம், நாடாளுமன்ற உறுப்பினர்களான அலி சாஹிர் மௌலானா, மன்சூர் மற்றும் பிரதிச் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர், பிரதி தவிசாளர் நயகமும் அமைசச்ர் ரவூப் ஹக்கீமின் அந்தரங்கச் செயலாளர் நயீமுல்லா தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீன் கட்சியின் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ.காதர் உயர்பீட உறுப்பினரும் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளருமான ரஹ்மத் மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களுக்க மேலதிகமாக வட மாகாண சபை உறுப்பனிர் ரயீஸ், வடமேல் மாகாண சபை உறுப்பினர் நியாஸ், மேல்மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான ஷியாத், மஹிலால் பிரதியமைச்சர் ஹாரிஸின் இணைப்புச் செயலாளர் அப்துல் ஹயீ, பிரசாரப் பிரிவைச் சேர்ந்த ரவூப் ஹஸீர் மற்றும் பல மாவட்டங்களையும் சேர்ந்த கட்சியின் முக்கியஸ்தர்களும் இந்தக் கூட்டத்தில் பலந்து கொண்டதாகவும் ஏ.ஸி. யஹியாகான் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY