கட்டாரிலிருந்து ஹெரோய்ன் கடத்திய வெளிநாட்டவர் கைது

0
120

ட்டாரிலிருந்து ஹெரோய்ன் போதை பொருளுடன் நாட்டுக்குள் பிரவேசிக்க முயன்ற வெளிநாட்டு பிரஜை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர், போதை பொருள் மாத்திரைகளை விழுங்கிய நிலையில் கடத்தி வருவதாக கிடைத்த தகவலுக்கு அமைய, விமானநிலைய பொலிஸ் போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் ஊடாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவரது வயிற்றிலிருந்து 52 போதை வில்லைகள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த வில்லைகளில் சுமார் 400 கிராம் ஹெரோய்ன் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 28 வயதான நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY