கைகள் இல்லாமல் துடுப்பாட்டம், காலால் சுழற்பந்து: வியக்க வைக்கும் வீரர்

0
135

இரண்டு கைகளை இழந்த நிலையிலும், ஒருவர் கிரிக்கெட் விளையாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த அமிர் ஹூசைன் லோனே (26), அந்த மாநில பாரா கிரிக்கெட் அணியின் தலைவராகவும் இருக்கிறார்.

இவரது தந்தை தெற்கு காஷ்மீரில் உள்ள பிஜ்பெஹரா நகரில் துடுப்பாட்ட மட்டைக்கு தேவையான மரங்களை செதுக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார்.

அப்போது ஒரு சமயம் அமிர் விளையாட்டுத் தனமாக மரத்தை அறுக்கும் எந்திரத்தை இயக்கிய போது அந்த இயந்திரத்தில் இரண்டு கைகளும் சிக்கி நசுங்கி விட்டது.

உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், கைகளை பொருத்த முடியவில்லை. இது அவரது 7வது வயதில் நடந்த சம்பவம்.

கைகளை இழந்த நிலையிலும் தன்னம்பிக்கையை இழக்கவில்லை என்று கூறும் அமிர், தனது இடது தோள்பட்டை மற்றும் தலையால் துடுப்பாட்ட மட்டையை பிடித்து துடுப்பெடுத்தாடி வருகிறார். அதேபோல் வலதுகாலை பயன்படுத்தி சுழற்பந்தும் வீசுகிறார்.

நம்பிக்கை இழக்காமல் போராடி வரும் அமிர், தான் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகன் என்றும், அவரை போன்று தேசிய அணிக்காக விளையாட வேண்டும் எனவும் மனம் தளராமல் உற்சாகமாய் கூறி வருகிறார்.

LEAVE A REPLY