சீன மக்கள் தொகை 2020-ல் 142 கோடியாகும்

0
220

சீனாவில் இரண்டாவது குழந்தைக்கு அனுமதி அளிக்கும் அரசின் புதிய கொள்கை காரணமாக அந்நாட்டின் மக்கள் தொகை வரும் 2020-ம் ஆண்டு இறுதியில் 142 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் தேசிய புள்ளி விவரத் துறை சார்பில் அந்நாட்டின் மக்கள் தொகை புள்ளி விவரம் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி 2015 இறுதியில் சீனாவின் மக்கள் தொகை 137 கோடியே 46 லட்சத்து 20 ஆயிரமாக உள்ளது.

சீன நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 13-வது ஐந்தாண்டு திட்ட (2016-2020) வரைவு அறிக்கையில், இரண்டாவது குழந்தைக்கு அனுமதி அளிக்கும் கொள்கை தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY