மைதானத்தில் விளையாடுவதை விட தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்ப்பது எளிது: தோனி கருத்து

0
128

கிரிக்கெட்டை பொறுத்த வரை மைதானத்தில் விளையாடுவதை விட தொலைக்காட்சியில் பார்ப்பது சற்று எளிது என்று இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

ஆசியக் கிண்ணம் வென்றதற்கு பிறகு மிர்பூரில் செய்தியாளர்களிடம் தோனி பேசியதாவது:-

இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்ல சுதந்திரம் உள்ளது. அதுவும் கிரிக்கெட் பற்றி தாராளமாக உண்டு.

இது மாதிரி விளையாடுங்க, அது மாதிரி விளையாடுங்க, இப்படி செய்யுங்க, அப்படி செய்யுங்க என்று சொல்லலாம். ஆனால் பிரச்சனை என்னவென்றால் மைதானத்தில் விளையாடுவதைவிட கிரிக்கெட்டை தொலைக்காட்சியில் பார்ப்பது கொஞ்சம் எளிது.

நிறைய விமர்சனங்கள் இருக்கிறது. அப்போது என்ன செய்வீர்கள் என்று யாராவது என்னிடம் கேட்டால், ”இந்தியாவிற்காக விளையாடுவது தான் என்னுடைய முதல் விருப்பம். வேறு எந்த நாட்டிற்காகவும் நான் விளையாட மாட்டேன்” என்று கூறுவேன்.

ஆனால் ஒரு தனி நபருக்கு நெருக்கடி ஏற்படும் போது அவர் நடுநிலையான பாதையை எடுக்க வேண்டும். மனம் தளரக் கூடாது. அதேபோல் நீங்கள் பாராட்டப்படும் போது தீவிரமாக எடுத்துக் கொள்ள கூடாது.

LEAVE A REPLY