நல்லாட்சியில் பெண்கள், சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியாகவுள்ளனர்

0
242

நல்லாட்சியில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியாகவுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கே.டி.எம்.சந்திரானி பண்டார தெரிவித்தார்.

சிறுவர்கள் மற்றும் பெண்களுடைய உரிமைகளை பாதுகாப்பதும் அதனை உறுதி செய்வதும் ஒவ்வொருவரதும் கடமை எனும் தொனிப்பொருளில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட சிறுவர் மகளிர் பணியகத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (06) மாலை இடம் பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற் சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இன்று இலங்கையில் உள்ள மொத்த சனத்தொகையில் ஐம்பத்திரண்டு வீதமானவர்கள் பெண்கள் அவர்களதும் எமது நாட்டில் உள்ள சிறுவர்களது பாதுகாப்பில் நாம் அனைவரும் பங்குதாரர்கலாக செயற்பட வேண்டும் அவர்களது உரிமைகள் மதிக்கப்படுவதற்கு பொலிஸார் அரச அதிகாரிகள் மற்றும் செயற்பட்டு அதில் வெற்றி கானமுடியாது அரசாங்கத்தின் அனைத்து அதிகாரிகளும் பொது அமைப்புக்களும் சேர்ந்து அவர்களது பாதுகாப்பிற்காக செயற்படும் போது அதில் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

எமது நாட்டில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படுத்தப்படும் பாலியல் துஸ்பிரயோகங்கள் தொடர்பாக அதிகமானோர் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்தில்லை பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்வது சிறமம் என்று நினைத்து அப்படியே இருந்து விடுகின்றனர் அதனாலயே ஜனாதிபதி மற்றும் பிதமரின் வழிகாட்டலில் பொலிஸ் நிலையங்களில் தனியான பிரிவாக சிறுவர் மகளிர் பணியகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது நாடலாவிய ரீதியில் இருபத்தேழு பணியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது இதில் மட்டக்களப்பில் காத்தான்குடியிலும் வாழைச்சேனையிலும் திறக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் பத்து லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் மகளிர் பணியகம் கோறளைப்பற்று, ஓட்டமாவடி, கிரான் மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் இடம் பெறும் சிறுவர் மகளிர் பிரச்சினைகள் தொடர்பாக பிரச்சினைகள் தொடர்கா செயற்படும் என்று வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இந் நிகழ்வல் மட்டக்களப்பு மாவட் உதவி மாவட்ட செயலாளர் எஸ்.ரங்கநாதன், கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ் அமைச்சின் உயர் அதிகாரிகள் கோறளைப்பற்று உதவி பிரதேச செயலாளர் திருமதி நிருபா பிருந்தன், கிரான் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் அருனன், மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயசிங்க, வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் விதானகே அல் கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி ஹாறூன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

(வாழைச்சேனை நிருபர்)

03 04 06 09 10

LEAVE A REPLY