மீண்டும் இலங்கை அணிக்குள் சங்கக்கார?

0
1402

உல­கக்­கிண்ண இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி சிறப்­பாக செயற்பட, இலங்கை கிரிக்கெட் அணியின் நட்­சத்­திர துடுப்­பாட்ட வீரர் குமார் சங்­கக்­கா­ரவின் உத­வியை இலங்கை கிரிக்கெட் சபை நாடி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பங்­க­ளா­தேஷில் நடை­பெற்­று­மு­டிந்த ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் செயற்­பாடு மிகவும் மோச­மாக இருந்­தது. பங்­க­ளாதேஷ் அணி­யிடம் முதல் முறை­யாகத் தோற்று இறுதிப் போட்­டிக்­கான வாய்ப்பை இழந்த இலங்கை அணி, கடைசிப் போட்­டியில் பாகிஸ்தான் அணிக்கு எதி­ரா­க நடந்த போட்­டியிலும் தோல்­வியைத் தழு­விக்­கொண்­டது.

இலங்கை அணியின் இந்த மோச­மான நிலைமை எதிர்­வரும் இரு­ப­துக்கு 20 உல­கக்­கிண்ணப் போட்­டியில் கவ­லை­ய­ளிக்கும் வித­மாக உள்­ளது.

இந்­நி­லையில் இலங்கை அணியை மறு மதிப்­பீடு செய்யும் முயற்­சியில் இலங்கை கிரிக்கெட் சபை கள­மி­றங்­கி­யுள்­ளது. இதற்­காக இலங்கை அணியின் முன்னாள் தலை­வரும் நட்­சத்­திர துடுப்­பாட்ட வீர­ரு­மான குமார் சங்­கக்­கா­ரவின் உத­வியை நாடி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

(Virakesari)

LEAVE A REPLY