பெண் சிறைக் கைதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களடங்கிய பொதிகள்

0
170

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் –

சர்வதேச பெண்கள் தினத்தன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் பிரிவு மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள பெண் சிறைக் கைதிகள் 14 பேருக்கு அத்தியாவசியப் பொருட்களடங்கிய பொதிகளை வழங்கி வைக்கவுள்ளதாக ரீஎம்விபி கட்சியின் மகளிர் அணித் தலைவி செல்வி மனோகர் தெரிவித்தார்.

படுக்கை விரிப்பு, துவாய், பற்தூரிகை, பற்பசை, சவர்க்காரம் உள்ளிட்ட இன்னோரன்ன அத்தியாவசியப் பொருட்கள் இப்பொதியில் அடங்கியிருப்பதாக செல்வி மனோகர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இடம்பெறும் வைபவத்தில் இந்த அத்தியாவசியப் பொருட்களடங்கிய பொதிகள் பெண் சிறைக் கைதிகளிடம் சர்வதேச மகளிர் தினத்தன்று கையளிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY