சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட பெறுமதிவாய்ந்த வேப்ப மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டன: ஓட்டமாவடியை சேர்ந்தவரிடம் விசாரனை

0
229

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள சந்திவெளியில் வைத்து சட்ட விரோதமாகக் கடத்தி வரப்பட்ட பெறுமதிவாய்ந்த ஒரு தொகை வேப்ப மரக்குற்றிகளை கைப்பற்றியதாக ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்தக பீரீஸ் தெரிவித்தார்.

பொதுமக்களிடம் இருந்து புலானய்வுப் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றதின் பேரில் ஞாயிறன்று இரவு 06.03.2016 இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

ஸ்தலத்திற்கு விரைந்து மறைந்திருந்த பொலிஸார் வாகன மொன்றில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட பெறுமதியான 6 அடி நீளம் கொண்ட 15 மரக்குற்றிகளையும் மரக்குற்றிகள் ஏற்றப்பட்ட பட்டா வாகனத்தையும் கைப்பற்றியதோடு அதன் சாரதியையும் கைது செய்தனர்.

இந்த மரக் குற்றிகள் ஓட்டமாவடியிலுள்ள மரக் காலைக்கு தளவாடங்கள் செய்வதற்காக ஏற்றிச் செல்லப்பட்டதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஓட்டமாவடியைச் சேர்ந்த வாகன சாரதி என். மன்சூர் (வயது 38) என்பவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY